தமிழ் ஆட்கொணர்வு மனு யின் அர்த்தம்

ஆட்கொணர்வு மனு

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட நபர் சட்டத்திற்குப் புறம்பாக அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில், அடைத்துவைக்கப்பட்டவரை ஆஜர்படுத்தக் காவல்துறையினருக்கோ தனிநபருக்கோ ஆணை வழங்கும்படி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் மனு.

    ‘தன் மனைவியை மாமனார் அடைத்துவைத்திருப்பதாகக் கூறி மாமனார்மீது அவன் ஆட்கொணர்வு மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தான்’