தமிழ் ஆத்மார்த்தம் யின் அர்த்தம்

ஆத்மார்த்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (நட்பு, பழக்கம், பேச்சு முதலியவை குறித்து வருகையில்) எந்த விஷயத்தையும் மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ளக்கூடிய நெருக்கம்.

  ‘ஆத்மார்த்தமாகப் பேசக்கூட இங்கு ஆள் இல்லை என்று கடிதத்தில் எழுதியிருந்தான்’
  ‘ஆத்மார்த்தமான நண்பன் பிரிந்துபோனதில் அவருக்கு மிகவும் வருத்தம்’

 • 2

  (ஒருவர் தன் மன நிறைவுக்காக மட்டும் ஒன்றைச் செய்யும்போது அனுபவிக்கும்) அலாதியான உணர்வு.

  ‘இரவு நீண்ட நேரம் ஆனதுகூடத் தெரியாமல் தனியாக உட்கார்ந்து ஆத்மார்த்தமாகப் பாடிக்கொண்டிருந்தார்’