தமிழ் ஆனால் யின் அர்த்தம்

ஆனால்

இடைச்சொல்

 • 1

  இரண்டு கூற்றுகளில் மாறாகவோ விலக்காகவோ இருப்பதை முதல் கூற்றோடு தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

  ‘உனக்கு இருபது ரூபாய் தருகிறேன். ஆனால் அது சினிமாவுக்குப் போவதற்காக அல்ல’
  ‘அவர் கோபமாக, ஆனால் கண்ணியமாகப் பேசினார்’
  ‘கால்வலி குணமாகிவிட்டது. ஆனால் முன்போல் நடக்க முடியவில்லை’

 • 2

  இரண்டு கூற்றுகளில் முதல் கூற்று நிபந்தனையாக அமையும்போது பயன்படுத்தப்பட்டு அதை இரண்டாவது கூற்றுடன் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

  ‘நான் பணம் வைத்திருந்தேனானால் உனக்குக் கொடுத்திருப்பேன்’
  ‘நீ முன்பே சொல்லியிருந்தாயானால் அனுப்பியிருப்பேன்’

 • 3

  இரண்டாவது கூற்றில் கூறப்படும் எழுவாய் முதல் கூற்றில் கூறப்படுவதற்கு முரண்பட்ட நிலையில் இருப்பதைக் காட்டுவதற்கு அதோடு இணைக்கப்படும் இடைச்சொல்.

  ‘உன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள்; நீயானால் அழுதுவடிகிறாய்’
  ‘மருந்து சாப்பிட்டால்தான் வியாதி போகும்; குழந்தையானால் மருந்து சாப்பிட ஒரே அழுகை!’