தமிழ் ஆபத்து யின் அர்த்தம்

ஆபத்து

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  இழப்பு அல்லது தீங்கு ஏற்படும் சாத்தியக்கூறு; அபாயம்; கேடு.

  ‘விபத்தில் சிக்கியவரை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்’
  ‘ஆபத்தான வளைவுகளில் வண்டியின் வேகத்தைக் குறைத்தார்’
  ‘ஆபத்துக் காலத்தில் உதவிய நண்பர்’

 • 2

  தொல்லைகளுக்குக் காரணம்.

  ‘பகலில் நாயை அவிழ்த்து விட்டது ஆபத்தாகப் போய்விட்டது’