தமிழ் ஆமை யின் அர்த்தம்
ஆமை
பெயர்ச்சொல்
- 1
குஞ்சு பொரிப்பதற்காகத் தன் முட்டைகளை நிலத்தில் புதைக்கும், கடினமான ஓட்டைக் கொண்டிருக்கும் (நிலம், நன்னீர், கடல் ஆகியவற்றில் வசிக்கும் இனங்களை உள்ளடக்கிய) ஊர்வன இனத்தைச் சேர்ந்த பிராணிகளைக் குறிக்கும் பொதுப் பெயர்.
‘ஒரு சில வகை ஆமைகளால் மட்டுமே பாதுகாப்புக்காகக் கால்களையும் தலையையும் தங்கள் ஓட்டினுள் இழுத்துக்கொள்ள முடியும்’‘கடல் ஆமை’‘ஆமை மாதிரி நடந்துவராமல் வேகமாக வா!’