தமிழ் ஆய் யின் அர்த்தம்

ஆய்

வினைச்சொல்ஆய, ஆய்ந்து

  • 1

    (கீரைகளிலிருந்தும் சில வகைக் காய்கறிகளிலிருந்தும் காம்பு, வேர் போன்ற பகுதிகளை) கிள்ளிக் களைதல்/(மீனின் செதில், நண்டின் ஓடு முதலியவற்றை) நறுக்கி எடுத்தல்.

  • 2

    உயர் வழக்கு ஆராய்தல்.

    ‘அறிஞர் பெருமக்கள் தாம் ஆய்ந்து கண்ட உண்மைகளை இந்நூலில் கூறியிருக்கின்றனர்’