தமிழ் ஆயத்தம் யின் அர்த்தம்

ஆயத்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (நடக்க இருக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக அல்லது செயலுக்காக மேற்கொள்ளும்) திட்டமிட்ட ஏற்பாடு; முன்னேற்பாடு.

  ‘மாலை நடக்கப்போகும் வரவேற்பிற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன’
  ‘ஆற்றிலிருந்து ஊருக்குக் குடிநீர் கொண்டுவருவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’

 • 2

  தயார் (நிலை).

  ‘போர் மூளுமானால் அதைச் சமாளிக்க ராணுவம் ஆயத்தமான நிலையில் இருக்கிறது’
  ‘வண்டி நிற்கும் முன்பாகவே அனைவரும் ஆயத்தமாக எழுந்து நின்றார்கள்’