தமிழ் ஆயுள் யின் அர்த்தம்

ஆயுள்

பெயர்ச்சொல்

 • 1

  உயிர் வாழும் காலம்.

  ‘மனிதனோடு ஒப்பிடும்போது பெரும்பாலான மிருகங்களின் ஆயுள் குறைவுதான்’
  ‘நீ ஆயுள் முழுவதும் படித்துக்கொண்டே இருந்துவிடப்போகிறாயா?’

 • 2

  உயிர்.

  ‘அவனுக்கு ஆயுள் கெட்டியாக இருந்ததால்தான் விபத்திலிருந்து தப்பினான்’
  ‘என் ஆயுள் உள்ளவரை நீ செய்த உதவியை மறக்கமாட்டேன்’

 • 3

  ஓர் இயந்திரம் நன்றாகச் செயல்படும் என்று உத்தேசமாக நிர்ணயிக்கப்பட்ட காலம்.

  ‘மின்கலனின் ஆயுளை அதிகரிக்க உரிய பராமரிப்பு அவசியம்’

 • 4

  ஓர் அமைப்பில் உள்ள உறுப்பினர்களின் பதவிக் காலம்.

  ‘மூன்று மாநிலச் சட்டசபைகளின் ஆயுள் காலமும் முடிவடைந்துவிட்டதால் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’

 • 5

  வேதியியல்
  கதிர்வீச்சால் அணு முற்றிலும் அழிந்துவிடும்வரையிலான காலம்.

  ‘சில ஐசோடோப்புகளின் ஆயுள் தன்னியல்பான கதிர்வீச்சால் குறுகிவிடுகிறது’