தமிழ் ஆரம் யின் அர்த்தம்

ஆரம்

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு மாலை.

  உரு வழக்கு ‘மறைந்த நடிகருக்குத் தலைவர்கள் புகழாரம் சூட்டினார்கள்’

 • 2

  (கிளி, புறா முதலிய சில பறவைகளின் கழுத்தில் காணப்படும்) வளையம் போன்ற கோடு.

  ‘ஆரம் விழுந்த கிளி’

தமிழ் ஆரம் யின் அர்த்தம்

ஆரம்

பெயர்ச்சொல்

 • 1

  வண்டிச் சக்கரத்தில் குடத்தை வட்டாவோடு இணைக்கும் பகுதி.

  ‘பார்க்க; படம்: கட்டை வண்டி’

 • 2

  கணிதம்
  வட்டத்தின் மையப் புள்ளிக்கும் பரிதிக்கும் இடைப்பட்ட தூரம்.