தமிழ் ஆராதனை யின் அர்த்தம்

ஆராதனை

பெயர்ச்சொல்

 • 1

  (மலரிடுதல், தீபம் காட்டுதல் போன்றவற்றால் தெய்வத்துக்குச் செய்யும்) வழிபாடு.

  ‘அம்மனுக்குத் தீபாராதனை நடக்கிறது’
  ‘பேராயர் அருட்திரு ஜேம்ஸ் ஆராதனையை நடத்திவைத்தார்’

 • 2

  (மறைந்த மகான்களின் நினைவுக்குச் செய்யும்) வழிபாட்டுச் சடங்கு.

  ‘திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை’