ஆறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஆறு1ஆறு2ஆறு3

ஆறு1

வினைச்சொல்ஆற, ஆறி

 • 1

  (சூடாக இருப்பது) சூடு குறைதல்.

  ‘நேரம் கழித்து வீட்டுக்குப் போனால் ஆறிப்போன சாப்பாடுதான் கிடைக்கும்’

 • 2

  (பசி, கோபம் போன்ற உணர்வுகள்) தணிதல்; குறைதல்.

  ‘பழங்களை உண்டு பசி ஆறிய பிறகு புறப்பட்டான்’
  ‘அப்பாவின் கோபம் ஆறியபின் கேட்டால் பணம் கிடைக்கும்’

 • 3

  (புண், காயம் முதலியன) குணமாதல்.

  ‘புண் ஆறப் பல நாள் ஆயிற்று’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு ஓய்வெடுத்தல்; இளைப்பாறுதல்.

  ‘வெயிலில் களைத்துவிட்டீர்கள். சற்று ஆறிவிட்டுப் போங்கள்’
  ‘சற்று நேரம் ஆறியபின் சாரதி பேருந்தைக் கிளப்பினார்’

ஆறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஆறு1ஆறு2ஆறு3

ஆறு2

பெயர்ச்சொல்

 • 1

  ஐந்து என்ற எண்ணுக்கு அடுத்த எண்.

ஆறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஆறு1ஆறு2ஆறு3

ஆறு3

பெயர்ச்சொல்

 • 1

  இரு கரைகளுக்கு இடையில் ஓடும் இயற்கையான நீர்ப் பெருக்கு/இவ்வாறு நீர்ப் பெருக்கு ஓடும் பரப்பு.

  ‘ஆறு சுழித்துக்கொண்டு ஓடியது’
  ‘இந்த ஆண்டு ஆற்றில் தண்ணீரே இல்லை’