தமிழ் ஆற்றல் யின் அர்த்தம்

ஆற்றல்

பெயர்ச்சொல்

 • 1

  திறமை.

  ‘நல்லதையும் கெட்டதையும் பகுத்துணரும் ஆற்றல்’
  ‘அவருடைய பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் நம்மை வியக்கவைக்கின்றன’
  ‘உனக்கு இவ்வளவு ஆற்றல் எங்கிருந்து வந்தது!’

 • 2

  இயற்பியல்
  ஒரு செயலுக்கு அல்லது இயக்கத்துக்குத் தேவையான மின்சாரம், வெப்பம், விசை போன்றவை; சக்தி.

  ‘ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஒரு ஆற்றலை வேறொரு ஆற்றலாக மாற்றத்தான் முடியும்’
  ‘மெழுகு திண்ம நிலையிலிருந்து நீர்ம நிலையை அடைவதற்கு வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது’
  ‘இது சூரிய ஆற்றலில் ஒடும் வாகனம்’