ஆளாகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஆளாகு1ஆளாகு2

ஆளாகு1

வினைச்சொல்ஆளாக, ஆளாகி

 • 1

  (கோபம், வருத்தம், துயரம் போன்ற விரும்பத் தகாத நிலைகளுக்கு) உள்ளாதல்; உட்படுதல்.

  ‘அவருடைய கோபத்துக்கு ஆளாகப் போகிறோமோ என்று பயந்துகொண்டே உள்ளே நுழைந்தான்’
  ‘தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிவிட்டேன்’
  ‘அவருடைய கேள்விக் கணைகளுக்கு ஆளாக நேரிடும்’
  ‘குழந்தைப் பருவத்தில் தாய்ப்பால் இல்லாமலேயே வளர்ந்ததால் பல நோய்களுக்கு ஆளாக வேண்டியிருந்தது’

 • 2

  (ஒருவர்) வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருதல்.

  ‘நீ ஆளாகித்தான் உன் குடும்பம் தலையெடுக்க வேண்டும்’

ஆளாகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஆளாகு1ஆளாகு2

ஆளாகு2

வினைச்சொல்ஆளாக, ஆளாகி

 • 1

  பூப்படைதல்; பருவமடைதல்.