தமிழ் ஆளுகை யின் அர்த்தம்

ஆளுகை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (அரசரின்) ஆட்சி.

    ‘சோழப் பேரரசன் இராஜேந்திர சோழன் தமிழகத்தின் சிறு நாடுகள் அனைத்தையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தான்’

  • 2

    உயர் வழக்கு (அரசின்) நிர்வாகம்.

    ‘இந்து அறநிலையத் துறை ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்கள்’