தமிழ் ஆளையாள் யின் அர்த்தம்

ஆளையாள்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு ஒருவருக்கொருவர்.

  ‘களவெடுத்துவிட்டு ஆளையாள் சாட்டிக்கொள்கிறார்கள்’
  ‘எந்தக் காரியமும் செய்யாமல் ஆளையாள் சாட்டிக்கொண்டிருப்பதே இவர்களுக்கு வழக்கமாகிவிட்டது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு ஒவ்வொருவரும்.

  ‘புதுக் கவிதையின் இலக்கணம் குறித்து ஆளையாள் வெவ்வேறு கருத்து கூறலாம்’
  ‘அவனாக உண்மையைச் சொல்லாதவரையில் ஆளையாள் அவனைச் சந்தேகிப்பது நியாயம்தான்’