தமிழ் ஆழ்ந்த யின் அர்த்தம்

ஆழ்ந்த

பெயரடை

 • 1

  மனமார்ந்த.

  ‘இறந்தவரின் குடும்பத்துக்கு அவர் தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார்’

 • 2

  (கருத்து, அறிவு போன்றவை குறித்து வரும்போது) ஆழமான/(மூச்சு, அமைதி போன்றவை குறித்து வரும்போது) நீண்ட.

  ‘ஆழ்ந்த கருத்துகள்’
  ‘அரசியலில் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது அவரது பேச்சு’
  ‘அவரிடமிருந்து ஆழ்ந்த பெருமூச்சு வெளிப்பட்டது’
  ‘ஆழ்ந்த அமைதி’

 • 3

  (தூக்கம், கற்பனை முதலியவற்றில்) தன்னை மறந்த.

  ‘நான் நேற்று உங்கள் வீட்டுக்கு வந்தபோது நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தீர்கள்’
  ‘நான் வந்ததுகூடத் தெரியாமல் அப்படி என்ன ஆழ்ந்த யோசனை?’

 • 4

  (நிறத்தைக் குறிக்கும்போது) அடர்ந்த; செறிவான.

  ‘ஆழ்ந்த நீல நிறம்’