தமிழ் ஆவேசம் யின் அர்த்தம்

ஆவேசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  உணர்ச்சிப் பெருக்கு; உணர்ச்சிவசப்பட்ட நிலை.

  ‘அமைதியிலும் கவிதை பிறக்கிறது, ஆவேசத்திலும் கவிதை பிறக்கிறது’
  ‘படத்தில் ஏசுவைச் சிலுவையில் அறையும் கட்டம் வந்ததும் நண்பருக்கு ஆவேசம் வந்துவிட்டது’
  ‘மேடையில் ஏறி மக்கள் வெள்ளத்தைக் கண்டதும் பேச்சாளர் ஆவேசமாகப் பேச ஆரம்பித்தார்’

 • 2

  கடும் கோபம்.

  ‘போலித்தனங்களைக் கண்டால் அவருக்கு வருகிற ஆவேசம்!’
  ‘தன்மீது ஏற முயன்ற எல்லோரையும் குதிரை ஆவேசமாகத் தள்ளியது’

 • 3

  மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்திகளால் பீடிக்கப்பட்டுத் தன்னை மறந்த நிலை.

  ‘அம்மன் கோயிலில் கொடை கொடுக்கும் நாளில் பூசாரிக்கு ஆவேசம் வந்துவிடும்’