தமிழ் இசகுபிசகாக யின் அர்த்தம்

இசகுபிசகாக

வினையடை

 • 1

  விரும்பத் தகாத விதத்தில்; எதிர்பாராமல்.

  ‘இருட்டில் நடந்தபோது எங்கோ இசகுபிசகாக இடித்து விட்டது’

 • 2

  தவறாக; தகாதவாறு.

  ‘அவரிடம் என்னைப் பற்றி ஏதாவது இசகுபிசகாகச் சொல்லிவிடாதே’
  ‘போகிற இடத்தில் இசகுபிசகாக எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்’