தமிழ் இடறு யின் அர்த்தம்

இடறு

வினைச்சொல்இடற, இடறி

 • 1

  (நடக்கும்போது கால் தடுக்கப்பட்டு) தடுமாறுதல்.

  ‘வேர் தடுக்கியதால் கால் இடறிக் கீழே விழப்பார்த்தான்’

 • 2

  (கல் முதலியன) காலில் பட்டுத் தடுமாறச்செய்தல்.

  ‘கல் இடறிற்று; கீழே விழுந்தான்’

 • 3

  (கீழே விழும்படி காலை) தட்டிவிடுதல்.

  ‘விளையாட்டாகத் தம்பியின் காலை இடற, அவன் தலைகுப்புற விழுந்தான்’