தமிழ் இடிவிழு யின் அர்த்தம்

இடிவிழு

வினைச்சொல்-விழ, -விழுந்து

  • 1

    (பூமியில் ஓரிடத்தில்) மின்னல் இடி ஒலியுடன் சேர்ந்து இறங்குதல்.

    ‘தென்னை மரத்தில் இடிவிழுந்து பற்றி எரிந்தது’
    ‘கோபுரத்தில் இடி விழுந்ததால் கலசம் சிதைந்துவிட்டது’
    உரு வழக்கு ‘மகள் இறந்த செய்தியைக் கேட்டதும் ‘ஐயோ, இடி விழுந்துவிட்டதே’ என்று கதறினார்’