தமிழ் இடுக்கு யின் அர்த்தம்

இடுக்கு

வினைச்சொல்இடுக்க, இடுக்கி

 • 1

  (ஒரு பொருளைக் கக்கத்தில் அல்லது கால்களுக்கு இடையில்) இறுக்கி வைத்துக்கொள்ளுதல்.

  ‘கக்கத்தில் குடையை இடுக்கியவாறே பேசிக்கொண்டிருந்தார்’
  ‘பானையை இடுப்பில் இடுக்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினாள்’

 • 2

  (கண்ணை) சுருக்குதல்.

  ‘இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்ததும் கண்ணை இடுக்கிக்கொண்டு பார்த்தார்’

தமிழ் இடுக்கு யின் அர்த்தம்

இடுக்கு

பெயர்ச்சொல்

 • 1

  (சுவர் முதலியவற்றில்) வெடிப்பு; (இரு பொருள்கள் இணையும் இடத்திலுள்ள அல்லது இரு உறுப்புகளுக்கு இடையே உள்ள) குறுகிய வெளி; திறப்பு.

  ‘சுவரோடு சாய்த்துவைத்திருந்த கட்டிலின் இடுக்கில் ஓடி ஒளிந்தது எலி’
  ‘கல் இடுக்கில் கால் மாட்டிக்கொண்டது’
  ‘நக இடுக்கில் அழுக்கு ஏறியிருந்தது’

 • 2

  (மிகவும்) குறுகலான இடம்.

  ‘இந்த இடுக்கில்கூட ஒரு குடிசையா!’