தமிழ் இடைக்கால உறுத்துக் கட்டளை யின் அர்த்தம்

இடைக்கால உறுத்துக் கட்டளை

பெயர்ச்சொல்

  • 1

    நிலுவையில் உள்ள மனுமீது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்வரை மனுதாரரின் உரிமையைப் பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று தனிநபருக்கோ அரசுக்கோ நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு.

    ‘குடித்தனக்காரருக்குத் தண்ணீர் வழங்குவது நிறுத்தப்படக் கூடாது என்று வீட்டுக்காரர்மீது நீதிமன்றம் இடைக்கால உறுத்துக் கட்டளையை பிறப்பித்தது’