தமிழ் இடையில் யின் அர்த்தம்

இடையில்

இடைச்சொல்

 • 1

  ‘இடைப்பட்ட இடத்தில் அல்லது காலத்தில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘சுவருக்கும் நாற்காலிக்கும் இடையில் நாய் படுத்திருந்தது’
  ‘ஒன்பது மணிக்கும் பத்து மணிக்கும் இடையில்தான் தபால்காரர் வருவார்’

 • 2

  ‘(ஒரு செயலின் அல்லது நிகழ்ச்சியின்) நடுவில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டுப் பேசாதே!’
  ‘இடையில் ஏற்பட்ட மின்தடை காரணமாக ஒலிபரப்பு பாதிக்கப்பட்டது’

 • 3

  ‘குறிப்பிடப்பட்டவர்களுக்குள் அல்லது குறிப்பிடப்பட்டவற்றுக்குள்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘எங்களுக்கும் எங்கள் பங்காளிகளுக்கும் இடையில் இருந்த தகராறு சுமூகமாகத் தீர்ந்தது’
  ‘இரு நாடுகளுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’