தமிழ் இணுக்கு யின் அர்த்தம்

இணுக்கு

வினைச்சொல்இணுக்க, இணுக்கி

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (இலை, காம்பு, தண்டு முதலியவற்றை நகத்தால்) கிள்ளித் துண்டாக்குதல்.

  ‘எனக்குக் கொஞ்சம் புகையிலை இணுக்கிக் கொடு’
  ‘முருங்கைக்கீரையை இணுக்குவது என்ன பெரிய வேலையா?’

தமிழ் இணுக்கு யின் அர்த்தம்

இணுக்கு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (இலை, காம்பு, தண்டு முதலியவற்றின்) கிள்ளிய சிறு துண்டு.

  ‘ஒரு இணுக்குப் புகையிலை கொடு. வாய் நமநமவென்று இருக்கிறது’