தமிழ் இணைப்பு யின் அர்த்தம்

இணைப்பு

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றாகத் தொடர்புபடுத்தப்பட்ட நிலை; சேர்ந்திருக்கும் நிலை.

  ‘புகைவண்டியின் கடைசிப் பெட்டி இணைப்பு அறுந்துபோய்த் தனித்து நின்றது’
  ‘சங்கிலிக் கண்ணிகளில் இணைப்பு விட்டிருக்கிறது’
  ‘கங்கை, காவிரி இணைப்பைப் பற்றி நீண்ட காலமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்’

 • 2

  (மின்சாரம், தொலைபேசி முதலானவற்றைப் பயன்படுத்துவோருக்கு அவை சென்று சேரும் வகையில் அமைக்கப்படும் கம்பி, குழாய் வழி) தொடர்பு.

  ‘மின் இணைப்பு இல்லாத கிராமம்’
  ‘வீட்டுக்குத் தொலைபேசி இணைப்பு எப்போது கிடைக்கும்?’

 • 3

  (தொலைபேசியின்) தனித்தனித் தொடர்பு.

  ‘இந்தத் தடத்தில் எல்லா இணைப்புகளும் உபயோகத்தில் உள்ளன’
  ‘இணைப்பு சரியாக இல்லை. அதனால் அவர் பேசுவது எனக்குத் தெளிவாகக் கேட்கவில்லை’

 • 4

  (தனித்தனியாக இருந்தவை) ஒன்றான நிலை.

  ‘‘பிரிந்துசென்ற கட்சிகளுடன் இணைப்பு சாத்தியமா?’ என்ற கேள்வியைத் தலைவரிடம் நிருபர் கேட்டார்’

 • 5

  (ஒரு பத்திரிகையின்) வழக்கமான பிரதியுடன் கூடுதலாக அச்சிட்டுத் தனியாகத் தரப்படுவது.

  ‘தினமணியுடன் ஞாயிற்றுக்கிழமை இலவச இணைப்பாகத் தினமணி கதிர் வழங்கப்படுகிறது’

 • 6

  கடிதம், அறிக்கை போன்றவற்றுடன் சேர்த்து அனுப்பப்படுவது.

  ‘கடிதத்தின் இறுதியில் ‘இணைப்பு: ரூ 2,000க்கான காசோலை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது’