தமிழ் இணையம் யின் அர்த்தம்

இணையம்

பெயர்ச்சொல்

 • 1

  கணிப்பொறிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் (மின்னஞ்சல், இணையதளம் போன்ற வசதிகளைக் கொண்ட) உலகம் தழுவிய தகவல் அமைப்பு.

  ‘இணையம் நமது அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் மாற்றிவருகிறது’
  ‘இது இணையத்தில் வரும் புதிய இதழ்’
  ‘இப்போது ரயில் பயணச் சீட்டுகளை இணையத்தின் மூலம் வாங்கலாம்’

 • 2

  (பல மாநிலங்களின் அல்லது பல சங்கங்களின்) கூட்டமைப்பு.

  ‘சுதந்திர இந்தியா பல நாடுகளின் இணையமாக அமையாமல் ஒரே நாடாக அமைந்தது’
  ‘இதழியலாளர் இணையத்தின் மாநில மாநாடு’