தமிழ் இதம் யின் அர்த்தம்

இதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    இசைவாகவும் அளவாகவும் அனுபவிக்கத் தகுந்ததாகவும் இருப்பது; சுகம்.

    ‘கோடைக் காலத்தில் மாலையில் கடற்காற்று இதமாக வீசுகிறது!’
    ‘குளிருக்கு இதமான சூடான காபி’
    ‘ஆறுதலான வார்த்தை மனத்துக்கு இதம் தந்தது’