தமிழ் இது யின் அர்த்தம்

இது

பிரதிப்பெயர்

 • 1

  பேசுபவருக்கு அருகில் இருக்கும் ஒருவரை அல்லது ஒன்றைக் குறிக்க அல்லது வாக்கியத்திலோ பத்தியிலோ சற்று முன்னர் குறிப்பிடப்பட்ட பெயரை மீண்டும் குறிப்பிடப் பயன்படுத்தும் பிரதிப்பெயர்.

  ‘அது என் தங்கை; இது என் மகள்’
  ‘இது என்ன புத்தகம்?’
  ‘இது மட்டும் அப்பாவுக்குத் தெரிந்ததென்றால் நான் தொலைந்தேன்’
  ‘எவ்வளவு எளிதான முறை! இது எப்படி எனக்குத் தோன்றாமல் போயிற்று?’
  ‘இது நடக்குமா நடக்காதா என்றெல்லாம் நான் யோசிக்கவேயில்லை’

 • 2

  காலத்தைக் குறிக்கும் ‘நாள்’, ‘சமயம்’ ஆகிய சொற்களுக்குப் பெயரடையாக வரும்போது ‘இந்த’ என்ற பொருளைச் சுட்டும் பிரதிப்பெயர்.

  ‘இதுநாள்வரை ராஜாவைப் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை’
  ‘நான் இதுசமயம் குறிப்பிட விரும்புவது என்னவென்றால்...’
  ‘இதுகாலமும் எங்களைப் பற்றிக் கவலைப்படாதவர் இப்போது இந்தக் கேள்விகளைக் கேட்பது நியாயம் இல்லை’