தமிழ் இதோ யின் அர்த்தம்

இதோ

இடைச்சொல்

 • 1

  அருகில் உள்ள ஒன்றை அல்லது ஒருவரைச் சுட்டிக்காட்டுவதற்காகப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘இதோ, இருக்கிறது பணம்!’
  ‘இதோ, இருக்கிறாரே! இவரை எங்கெல்லாம் தேடினோம்’
  ‘இதோ, நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது’

 • 2

  ‘மிக விரைவில்’, ‘உடனே’ என்னும் பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘‘இதோ, வந்துவிட்டேன்.’’
  ‘‘இதோ, தருகிறேன்’ என்று பணத்தை எடுத்தார்’