தமிழ் இன்னமும் யின் அர்த்தம்

இன்னமும்

வினையடை

 • 1

  இதுவரையிலும்; இன்னும்.

  ‘புது வீட்டில் இன்னமும் குடியேறவில்லை’
  ‘நீ இன்னமுமா கிளம்பவில்லை?’

 • 2

  பேச்சு வழக்கு மேலும்; இன்னும்.

  ‘நீ கேட்டதைக் கொடுத்துவிட்டேன். இன்னமும் என்ன வேண்டும்?’
  ‘இன்னமும் கொஞ்சம் தண்ணீர் கொடு’
  ‘இன்னமும் சாப்பிட என்ன இருக்கிறது?’

 • 3

  (முன்புபோல்) இப்பொழுதும்.

  ‘இன்னமும் நீ நடந்துதான் அலுவலகத்திற்குச் செல்கிறாயா?’