தமிழ் இயக்கம் யின் அர்த்தம்

இயக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (சீரான) அசைவு அல்லது நகர்வு; செயல்பாடு.

  ‘கோள்களின் இயக்கம்’
  ‘இயந்திரங்களின் இயக்கத்தால் ஏற்பட்ட ஓசை காதைத் துளைத்தது’
  ‘மூளை அனுப்பும் செய்திகளின்படி நம் உடலின் அனைத்து இயக்கங்களும் நடைபெறுகின்றன’

 • 2

  (மாற்றத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்தும்படியான) கூட்டுச் செயல்பாடு.

  ‘‘வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கம் காந்தியடிகளால் அறிவிக்கப்பட்டது’
  ‘ஓவியக் கலையில் பல புதிய இயக்கங்கள் உருவாகியுள்ளன’

 • 3

  திரைப்படம், நாடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவை முழு வடிவம் பெறுவதற்கான பொறுப்பை ஒருவர் ஏற்றிருக்கும் நிலை/திரைப்படம், நாடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவற்றில் நடனம், ஒளிப்பதிவு போன்றவற்றுக்கு ஒருவர் பொறுப்பேற்றிருக்கும் நிலை.

  ‘பிரபல இயக்குநரின் இயக்கத்தில் வெளிவந்த படம் பெரும் வெற்றி பெற்றது’
  ‘சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருது எனது இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட ‘பரதம்’ என்னும் நாட்டியத் தொடருக்குக் கிடைத்துள்ளது’
  ‘சிறந்த ஒளிப்பதிவு இயக்கத்துக்கான தேசிய விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவருக்குக் கிடைத்துள்ளது’

 • 4

  இயற்பியல்
  விசையின் காரணமாக அல்லது ஆற்றலின் காரணமாக ஒரு பொருள் செயல்படும் நிகழ்வு.

 • 5

  இலங்கைத் தமிழ் வழக்கு ஆயுதம் தாங்கிப் போராடும் தமிழர் குழுக்களைப் பொதுவாகக் குறிக்கும் பெயர்.

  ‘தேர்தலில் போட்டியிடப்போவதாகச் சில இயக்கங்கள் அறிவித்துள்ளன’
  ‘இயக்கத் தலைவர்’
  ‘இயக்கத்தோடு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது’