தமிழ் இயந்திரம் யின் அர்த்தம்

இயந்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு வேலையைச் செய்வதற்கு உருவாக்கப்பட்டதும் நீராவி, மின்சாரம் முதலிய சக்திகளாலோ மனித சக்தியாலோ இயக்கப்படுவதுமான கருவி அல்லது சாதனம்.

    ‘19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் எண்ணற்ற இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன’
    உரு வழக்கு ‘தேர்தலின்போது கட்சிகளின் பிரச்சார இயந்திரம் முடுக்கிவிடப்படுகிறது’
    உரு வழக்கு ‘‘அரசு இயந்திரம் முடங்கிவிட்டது’ என்று எதிர்க் கட்சித் தலைவர் குற்றம்சாட்டினார்’