தமிழ் இரட்டி யின் அர்த்தம்

இரட்டி

வினைச்சொல்இரட்டிக்க, இரட்டித்து

 • 1

  இரண்டு மடங்காக்குதல்.

  ‘இரசாயன உரங்களால் மகசூலை இரட்டித்துவிட முடியும் என்று அவர் நம்பினார்’
  ‘வருமானத்தை இரட்டிக்க என்ன வழி?’

 • 2

  இரண்டு மடங்கு ஆதல்.

  ‘அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் மொத்த அறிவின் அளவு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இரட்டிக்கிறது என்று கூறுகிறார்கள்’

 • 3

  (ஒன்று) இரண்டாதல்.

  ‘சில கிருமிகள் இரட்டித்துத்தான் இனத்தைப் பெருக்குகின்றன’

 • 4

  இலக்கணம்
  (வல்லின எழுத்துகளும் சில இடையின எழுத்துகளும்) மீண்டும் ஒருமுறை தோன்றுதல்.

  ‘‘காடு’ என்னும் சொல்லில் உள்ள ‘டகரம்’ வேற்றுமை உருபு ஏற்கும் முன் ‘காட்டு’ என இரட்டிக்கும்’