தமிழ் இருப்பிடம் யின் அர்த்தம்

இருப்பிடம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்று அல்லது ஒருவர்) இருக்கும் அல்லது வசிக்கும் இடம்; உறைவிடம்.

  ‘எல்லோருக்கும் வேலையும் இருப்பிடமும் மருத்துவ வசதியும் வேண்டும்’
  ‘சிங்கத்தின் இருப்பிடத்தைத் தேடி அந்த மூன்று பேரும் சென்றார்கள்’
  உரு வழக்கு ‘அவர் அன்பின் இருப்பிடம்’

 • 2

  (ஒரு பொருள் அல்லது தன்மை) இருக்கும் இடம்.

  ‘சுவடிகளின் இருப்பிடங்களைத் தேடி அலைந்தார்’
  ‘தாந்திரிக இலக்கியம் உணர்வின் இருப்பிடம் மூளை என்கிறது’