தமிழ் இளக்காரம் யின் அர்த்தம்

இளக்காரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒருவர்மேல் தனக்குள்ள இகழ்ச்சியையும் கேலியையும் வெளிப்படுத்தும் விதத்தில் அல்லது ஒருவரைச் சற்றும் மதிக்காத விதத்தில் நடந்துகொள்ளும் போக்கு.

    ‘அவன் அவளைப் பார்த்து இளக்காரமாகச் சிரித்தான்’
    ‘என்னுடைய அப்பா என்றால் உங்களுக்கு எப்போதும் இளக்காரம்தான்’