தமிழ் இழுத்துக்கொண்டு போ யின் அர்த்தம்

இழுத்துக்கொண்டு போ

வினைச்சொல்போக, போய்

 • 1

  (தான் காதலிப்பவரைத் திருமணம் செய்துகொள்வதற்காக) மற்றவர்களுக்குத் தெரியாமல் அழைத்துக்கொண்டு போதல்.

  ‘எதிர் வீட்டுப் பையன் யாரோ ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு போய்விட்டானாம்’
  ‘உன் அக்கா யாரையோ இழுத்துக்கொண்டு போய்விட்டாள் என்று கேள்விப்பட்டேனே!’

தமிழ் இழுத்துக்கொண்டு போ யின் அர்த்தம்

இழுத்துக்கொண்டு போ

வினைச்சொல்போக, போய்

 • 1

  (செலவுகள்) எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக ஆகுதல்.

  ‘அவர் தன் மகளின் திருமணத்தைச் சிக்கனமாக முடித்துவிட வேண்டும் என்று நினைத்தார். ஆனாலும் கல்யாணச் செலவு எங்கோ இழுத்துக்கொண்டு போய்விட்டது’
  ‘மூன்று லட்சத்தில் வீடு கட்டிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் செலவு இழுத்துக்கொண்டு போய்விட்டது’