தமிழ் இழுத்துப்போட்டுக்கொள் யின் அர்த்தம்

இழுத்துப்போட்டுக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (வேலைகளை அல்லது பொறுப்புகளை) வலிய ஏற்றுக்கொள்ளுதல்.

    ‘கல்யாண வேலைகள் அனைத்தையும் அவனே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தான்’
    ‘எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு முடிக்க முடியாமல் வருத்தப்படாதே’