தமிழ் இழையோடு யின் அர்த்தம்

இழையோடு

வினைச்சொல்இழையோட, இழையோடி

 • 1

  (ஒரு செய்தி அல்லது உணர்வு ஒன்றின் பின்புலத்தில்) ஊடுருவி இருத்தல்; அடிச் சரடாகக் காணப்படுதல்.

  ‘அவர் பேச்சிலும் முகத்திலும் சோகம் இழையோடியிருந்தது’
  ‘இவர் கவிதைகளில் இழையோடியிருக்கும் உணர்வு மனிதநேயமே’

 • 2

  (மூச்சு) மிகச் சன்னமாக வெளிப்படுதல்.

  ‘உயிர் இன்னும் பிரியவில்லை; மூச்சு இழையோடுகிறது’