ஈடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஈடு1ஈடு2

ஈடு1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒப்பிடும்போது தகுதியில், மதிப்பில், செயலில்) சரிசமம்; இணை.

  ‘இந்தத் துறையில் இதற்கு ஈடான வேறொரு நூல் இதுவரை வெளிவரவில்லை’
  ‘அவர் என்மேல் காட்டும் அன்புக்கு ஈடாக எதுவும் இல்லை’
  ‘இந்த மலைப் பகுதியின் அழகுக்கு ஈடு வேறு எந்த இடமும் இல்லை’

 • 2

  (ஒன்றுக்கு) மாற்று; பதில்.

  ‘நான் தொலைத்துவிட்ட உன் பேனாவிற்கு ஈடாக இந்தப் பேனாவை வைத்துக்கொள்’
  ‘மருத்துவமனை கட்ட இடம் தந்தவர்களுக்கு ஈடாக வேறு இடத்தில் இடம் ஒதுக்கப்பட்டது’

 • 3

  அடகு.

  ‘சங்கிலியை ஈடாக வைத்துத்தான் பணம் வாங்கப்போகிறாயா?’

ஈடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஈடு1ஈடு2

ஈடு2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தென்னை போன்ற மரங்கள் பல்வேறு எண்ணிக்கையில் அடுத்தடுத்து காய்க்கும்போது அல்லது கோழி முட்டை இடும்போது அல்லது இட்லி போன்ற உணவுப் பண்டங்கள் தயாரிக்கப்படும்போது) தடவை; முறை.

  ‘இந்த மாமரம் ஒரு ஈட்டுக்கு நூறு காய் தரும்’
  ‘இன்னும் ஒரு ஈடு கொழுக்கட்டை எடுத்துவிட்டால் எல்லோரும் சாப்பிடலாம்’