ஈர் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஈர்1ஈர்2ஈர்3

ஈர்1

வினைச்சொல்

 • 1

  (பொருள்களைத் தன்னை நோக்கி) இழுத்தல்.

  ‘பொருள்களை ஈர்க்கும் சக்தி பூமிக்கு இல்லையென்றால் நாம் மிதக்க வேண்டியதாகிவிடும்’
  ‘காந்தம் இரும்பை ஈர்க்கும்’

 • 2

  (பூமி நீரை) உறிஞ்சுதல்.

  ‘வறண்டு கிடந்த நிலம் மழைநீரை உடனே ஈர்த்துக்கொண்டது’

 • 3

  (மனத்தை, கவனத்தை) கவர்தல்; (ஒருவரைத் தன் பக்கம்) இழுத்தல்.

  ‘ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது’
  ‘அவளுடைய இனிய பேச்சும் சிரிப்பும் அவனை ஈர்த்தன’

ஈர் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஈர்1ஈர்2ஈர்3

ஈர்2

பெயர்ச்சொல்

 • 1

  பேனின் முட்டை.

ஈர் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஈர்1ஈர்2ஈர்3

ஈர்3

பெயரடை

 • 1

  (உயிர் எழுத்துகளில் தொடங்கும் பெயர்ச்சொற்களுக்கு முன் வரும்போது) இரண்டு என்பதன் பெயரடை வடிவம்; இரு.

  ‘ஈருருளை’
  ‘ஈரடிச் செய்யுள்’