தமிழ் ஈர்ப்பு யின் அர்த்தம்

ஈர்ப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரைத் தன் பக்கம்) இழுக்கும் தன்மை அல்லது ஆற்றல்; கவர்ச்சி.

  ‘அவளுடைய சிரிப்புக்கு அப்படி ஓர் ஈர்ப்புச் சக்தியா?’

 • 2

  (பொருள்களைத் தன்னை நோக்கி வரச்செய்யும்) இழுப்புச் சக்தி; ஆகர்ஷணம்.

  ‘பூமியின் ஈர்ப்பு விசைக்கு அப்பால் சென்றுவிட்டால் கீழே விழ முடியாது’
  ‘அணுக்களுக்கு இடையே உள்ள ஈர்ப்புச் சக்தி’
  ‘புவியின் ஈர்ப்பு ஆற்றலைவிட சூரியனின் ஈர்ப்பு ஆற்றல் பல மடங்கு அதிகம்’

 • 3

  (ஒருவர் ஈடுபட்டிருக்கிற செயல் அவரைப் பிற செயல்களில் கவனத்தைச் செலுத்தவிடாமல்) கவர்கிற நிலை.

  ‘கதையின் ஈர்ப்பில் ஆள் வந்ததைக்கூட அவன் கவனிக்கவில்லை’