தமிழ் உச்சரி யின் அர்த்தம்

உச்சரி

வினைச்சொல்உச்சரிக்க, உச்சரித்து

 • 1

  (எழுத்தை, சொல்லை) ஒலித்தல்.

  ‘அவர் தமிழ்ச் சொற்களைப் பிழை இல்லாமல் உச்சரிக்கத் தெரிந்த நடிகர்’
  ‘ழகரத்தை உச்சரிப்பது சற்றுக் கடினம்’

 • 2

  (ஒரு சொல்லை) சொல்லுதல்.

  ‘ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ‘சுதந்திரம்’ என்ற சொல்லை உச்சரிக்கவே பலர் பயந்தனர்’
  ‘குருவின் மீது இருந்த பக்தியினால் அவர் பெயரை உச்சரிக்கவே அவன் தயங்குவான்’

 • 3

  (மந்திரம், சுலோகம்) சொல்லுதல்.

  ‘கண்களை மூடி மந்திரத்தை உச்சரித்தவாறு அமர்ந்திருந்தார்’