தமிழ் உச்சி யின் அர்த்தம்

உச்சி

பெயர்ச்சொல்

 • 1

  (உயரமான ஒன்று) முடியும் இடம்.

  ‘கோபுரத்தின் உச்சியில் இரண்டு காக்கைகள் உட்கார்ந்திருந்தன’

 • 2

  உச்சந்தலை.

  ‘உச்சியில் முதலில் எண்ணெய் வைத்தாள்’
  ‘உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை நகைதான்’

 • 3

  வட்டார வழக்கு வகிடு.

 • 4

  (புகழ், செல்வாக்கு முதலியவற்றின்) உச்சம்.

  ‘அவர் புகழின் உச்சியில் இருக்கிறார்’
  ‘நாம் நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாக நினைத்துக்கொள்கிறோம்’

 • 5

  தலைக்கு நேர் மேலாக இருக்கும் வானத்தின் பகுதி.

  ‘சூரியன் காலையில் உதித்து நடுப்பகலில் உச்சிக்கு வந்து மாலையில் மறைவது நாள்தோறும் நடைபெறும் நிகழ்வு’
  ‘உச்சியில் இருந்த சூரியன் மேற்கே நகர ஆரம்பித்தது’