தமிழ் உச்சுக்கொட்டு யின் அர்த்தம்

உச்சுக்கொட்டு

வினைச்சொல்-கொட்ட, -கொட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (‘உச்சு’ என்ற ஒலி எழுப்புவதன்மூலம்) அக்கறையின்மை, விருப்பமின்மை, வெறுப்பு போன்றவற்றை வெளிக்காட்டுதல்.

    ‘நான் பாட்டுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். நீ உச்சுக்கொட்டினால் என்ன அர்த்தம்?’
    ‘அப்பாவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது என்று நான் சொல்ல, அவன் உச்சுக்கொட்டினான்’