தமிழ் உசிதம் யின் அர்த்தம்

உசிதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (குறிப்பிட்ட சூழ்நிலையில் பேச்சு, செய்கை முதலியவற்றின்) பொருத்தம்; (குறிப்பிட்ட நேரத்திற்கு அல்லது சூழ்நிலைக்கு) பொருத்தமானது; சரியானது; முறையானது.

  ‘விபத்து நடந்த இடத்துக்கு வந்திருந்த அமைச்சரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுப்பது உசிதமாக இராது’
  ‘நீ அவரிடம் நடந்ததைச் சொல்லிவிடுவது உசிதமானது’
  ‘அவையில் அவர் உபயோகித்த சில சொற்கள் உசிதமற்றவை’

 • 2

  நிலைமைக்குத் தகுந்தது.

  ‘நீங்கள் உங்கள் உசிதம்போல் எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை தரலாம்’