தமிழ் உடும்புப் பிடியாக யின் அர்த்தம்

உடும்புப் பிடியாக

வினையடை

  • 1

    (கொண்ட எண்ணம், கருத்து முதலியவற்றில்) விடாப்பிடியாக; உறுதியாக.

    ‘தெரியாத்தனமாக நாளை கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அதை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டு பையன் அழுதுகொண்டிருக்கிறான்’
    ‘என்ன விலை தந்தாலும் தன் நிலத்தை விற்பதில்லை என்பதில் அவர் உடும்புப் பிடியாக இருக்கிறார்’