தமிழ் உடைவாள் யின் அர்த்தம்

உடைவாள்

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில் படை வீரர்களும் தற்காலத்தில் அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளின்போது உயர் ராணுவ அல்லது காவல்துறை அதிகாரிகளும்) உடையில் செருகிவைத்திருக்கும் வாள்.

    ‘ராணுவ அணிவகுப்பின்போது ராணுவ அதிகாரி உடைவாளைத் தன்னுடைய முகத்துக்கு நேரே உயர்த்திப் பிடித்துக் குடியரசுத் தலைவருக்கு வணக்கம் தெரிவித்தார்’