தமிழ் உண் யின் அர்த்தம்

உண்

வினைச்சொல்உண்ண, உண்டு

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (உணவு) சாப்பிடுதல்; (நீர், கள்) குடித்தல்.

  ‘உண்ண உணவும் இருக்க இடமும் வேண்டும்’
  ‘காட்டில் மான்கள் நீர் உண்ணும் காட்சி’

தமிழ் உண் யின் அர்த்தம்

உண்

துணை வினைஉண்ண, உண்டு

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பைக் குறிப்பிடும் பெயர்ச்சொற்களோடு இணைந்து ‘உள்ளாதல்’ என்ற பொருளில் அவற்றை வினையாக்கும் வினை.

  ‘கொலையுண்டவர் யார்?’
  ‘திருவிழாக் கூட்டத்தில் சிக்கி நசுக்குண்டேன்’
  ‘அவர் வார்த்தைக்கு நாங்கள் கட்டுண்டோம்’
  ‘புதையுண்ட நகரங்கள்’