தமிழ் உத்தமம் யின் அர்த்தம்

உத்தமம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  நல்லது விளைவிக்கக்கூடியது.

  ‘உண்மையைச் சொல்லிவிடுவது உத்தமம்’
  ‘அவர் கோபமாக இருக்கும்போது நாம் பேசாமல் இருப்பதுதான் உத்தமம்’

 • 2

  உயர்ந்தது; எடுத்துக்காட்டாகக் கூறக்கூடியது.

  ‘உத்தம குணம்’
  ‘உத்தம இலட்சணம் பொருந்திய குதிரை’
  ‘உத்தமமான மனிதர்’

 • 3

  சோதிடம்
  சுபம்; மங்களம்.

  ‘இந்த ராசிக்காரர் எல்லா நன்மையும் அடைவார். இந்த நிலை உத்தமம்’