தமிழ் உத்தரவாதம் யின் அர்த்தம்

உத்தரவாதம்

பெயர்ச்சொல்

 • 1

  (பொருளின் தரத்துக்கு அல்லது ஒருவரின் நன்னடத்தைக்கு) ஒருவரால் அளிக்கப்படும் உறுதி; பொறுப்பு.

  ‘வாங்கிய கடனை அவர் நாணயமாகத் திருப்பித் தருவார் என்பதற்கு நான் உத்தரவாதம்’

 • 2

  (ஒருவர் எதிர்பார்ப்பது நிகழும் அல்லது கிடைக்கும் என்பதற்கான) உறுதி; நிச்சயம்.

  ‘கூலி வேலை செய்பவர்களுக்குத் தினமும் வேலை கிடைக்கும் என்கிற உத்தரவாதம் இல்லை’

 • 3

  (உயிருக்கு) பாதுகாப்பு.

  ‘இது மிகவும் ஆபத்தான வேலை; உயிருக்கு உத்தரவாதம் இல்லை’